சிறுமியை சீரழித்து…. தூக்கி வீசிய கொடூரன்…. மதுரவாயலில் சோகம் ….!!

சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குள் வர வில்லை என்பதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தேடிய போது சிறுமி கிடைக்காததில் மதுரவாயல் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து பின்புறமிருந்து அழுகுரல் கேட்டது.உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சொல்லப்படுகின்றது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்களுடன் சிறுமியை தேடியது தொடங்கி சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தது வரை ஒன்றும் தெரியாதவரை போல இருந்த சுரேஷ் சிக்கினார்.சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 3ஆவது மாடியில் இருந்து தூக்கி எறிந்ததை ஒப்புக் கொண்டார்.