மாடி விட்டு மாடி தாவ முயற்சி…. தவறி விழுந்த திருடன் பலி!!

மயிலாடுதுறையில் திருடன் ஒருவன்  ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும்  சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும்  காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின்  மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு  குதித்துள்ளார். சுமார்  15 அடி உயரத்தில் இருந்து  குதித்த போது, சற்று நிலை தடுமாறி கீழே தரையில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

Related image

பின்னர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டன் உயிரிழந்ததை அறிந்த உடனே  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். திருட வந்த இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.