அதர்வா_வின் 100 படத்தின் டீஸர் வெளியானது..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

அதர்வா நடிப்பில் உருவாகும் 100 படத்தின் டீஸர் இன்று படக்குழுவாள் வெளியிடப்பட்டது. 

 

ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவான படம் பூமராங். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மற்றோரு படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து மேலும் மூன்று படங்களில் நடிகர் அதர்வா நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அதர்வா ஹன்சிகாவுடன் முதல் முதலாக ஒரு படத்தில் ஜோடி சேர உள்ளார். இப்படத்தின் பெயர் 100 என்பதாகும்.

Related image

இப்படத்தினை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார். இவர் டார்லிங் , எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற  படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹன்சிகா ,அதர்வா, யோகி பாபு ,எரும சாணி புகழ் ஹரிஜா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற மே 3_ம் தேதி 100 படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

https://youtu.be/Yyrp7PFhm3w