“ஆசிரியர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவும் மாணவிகள்” வைரலாகும் வீடியோ …!!

கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட உணவு பாத்திரத்தை நான்காம் வகுப்பு மற்றும் 3_ஆம் வகுப்பு மாணவிகளை கழுவ செய்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.