துருக்கி ராணுவம் பதிலடி… சிரிய படையினர் 55 பேர் உயிரிழப்பு..!!

சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் 55 சிரிய பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் 55 சிரிய வீரர்கள்  கொல்லப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஆதரவுடன் துருக்கி படைகளும், ரஷ்யா ஆதரவுடன் சிரிய படைகளும் அடிக்கடி நடத்திவரும் இந்த கோர தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *