சாரதா சிட்பண்ட் மோசடி : ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடியில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய அந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது.

Related image

இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிதி நிறுவன மோசடி குறித்து, முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். இந்த விசாரணையை அவர் முறைப்படி நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Image result for The Supreme Court ​​former Kolkata Police Commissioner Rajeev Kumar in the Saradha Chit Fund scam.

இதன் பின்னர் சிபிஐ அலுவலர்கள் ராஜிவ் குமாரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இந்தச்சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ராஜிவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Image result for The Supreme Court on November 29 adjourned the hearing of the CBI probe into the CBI's plea seeking to revoke the bail plea of ​​former Kolkata Police Commissioner Rajiv Kumar in the Saradha Chit Fund scam.

இந்த முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *