கோடை வெயிலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பூங்கா…!!

 கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர்.

இங்கு அமைந்துள்ள  நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் பூங்கா தஞ்சையிலும், பாலை பூங்கா ராமநாதபுரம் அச்சடிபிரம்பிலும் அமைக்கப்பட்டது.

தொடர்புடைய படம்

இங்கு உவர்ப்பு மண் காரணமாக அச்சடிபிரம்பில் பாலை பூங்கா அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  அதன்பின் அச்சடிபிரம்பில் மண்ணின் தன்மையை மாற்றி, செடிகள் வளர்க்கப்பட்டு ஐந்திணை பூங்காவாக அமைக்கப்பட்டது. இங்கு பாலைக்கே உரிய பனை மரக்குடில்கள் ஏராளமாக உள்ளன.

இந்த பூங்காகளில்  ஊதா கலரில் பூக்கும் காட்டுரோஜா, பைஜஸ்பெஞ்சமினா, கிளியோடென்ட்ரான், கூந்தல் பனை, கற்றாழை, மணல் மேடுகள், யானை போன்ற காட்டு விலங்குகளின் சிலைகள் உள்ளன. இந்த பூங்கா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் திருச்செந்துார், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.