“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் முதல்வராக பதவி ஏற்கிறார்.

மேலும் புதிதாக அமையவுள்ள ஆந்திர மாநில அமைச்சரவையில் நடிகை ரோஜா இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பிராந்தியம் சித்துார் மாவட்டத்திற்குட்பட்ட நகரி சட்டமன்ற தொகுதியில் YRS காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் காளி பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக மீண்டும் MLA_வாக வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.