“பள்ளி திறப்பில் மாற்றமில்லை” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளியை திறப்பதில் மாற்றமில்லை என்றும் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது.

கோடை விடுமுறையில் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.