பேருந்தின் மீது கல்வீச்சு…! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில்  குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு  பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத்  தொடர்ந்து தகராறு செய்துள்ளார்.

the-common-people-who-have-broken-the-specimen-of-the-state-bus

இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக்  கொண்டு பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.இதனை பார்த்த பயணிகளும்,பொதுமக்களும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அரசுப்பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் ஒரு பயணி மற்றும் நடத்துனரும்  பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து மீட்டு குடிபோதையில் உள்ள வாலிபரை விசாரணை செய்து வருகின்றனர்.