மத்திய அரசோடு மாநில அரசு துணை நிற்கும்… எடப்பாடி கருத்து …!!

மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர்  அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை  எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார்.

Image result for எடப்பாடி பேட்டி

திமுக கூட்டணியால் நாட்டு மக்களுக்கு நன்மை  செய்யும் என்ன திட்டம் வந்துள்ளது.கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் , சட்டமன்ற இடைத் தேர்தலிலும் எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தார்கள் என்று  அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தலில் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய மத்திய அரசுக்கு மாநில அரசு  துணை நிற்கிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.