இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்…. பல்லாவர பரிதாபம்…!!

பல்லாவரத்தில் இராணுவ வீரரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பிரவீன்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் கீழ் பணியாற்றுபவர்கள் ஜக்ஸிர். இவர் சரியாக பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தகவல் வெளியாகியது.இது தொடர்பாக ஜக்ஸிர்_ருக்கும் , பிரவீன்குமாருக்கும்  அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படும்.அதே போல நேற்று நள்ளிரவிலும் ராணுவ முகாமில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

Image result for சுட்டுக்கொன்ற

இதனால் ஆத்திரமடைந்த ஜக்ஸிர் அதிகாலை 3 மணி பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பிரவீன் குமார் அறைக்கு சென்ற ஜக்ஸிர் துப்பாக்கியால் பிரவீன்குமாரை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் ஜக்ஸிர் தன்னைத் தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.பின்னர் நந்தம் பாக்கத்தில் இருக்க கூடிய ராணுவ மருத்துமனைக்கு கொண்டு சென்று இருவரின் உடலை  பரிசோதித்த டாக்டர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.