சமூக நீதி என்ற கோட்டை ”எந்த கொம்பனாலும் முடியாது” திருமா ஆவேசம்…!!

சமூக நீதி என்ற கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.

திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் திருமாவளவன், பெரியார் இல்லை , அண்ணா இல்லை , கலைஞர் இல்லை ஆனால் சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க்குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதில் விடுதலைச் சிறுத்தைகளும் , இடதுசாரிகளும் சமூகநீதியை காப்பாற்றி சிறுபான்மை சமூகத்தினருக்காக  இன்றைக்கு ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

ஆனால் நம்மை பிரிப்பதற்கு , சிதைப்பதற்கு , சாதி அடிப்படையில் சிதற அடிப்பதற்கு , மதவாத சக்திகள் துடிக்கிறார்கள் , தூண்டிவிடுகிறார்கள். அதன் விளைவு தான் பெரியார் சிலைகளை உடைப்போம் என்பது.  அம்பேத்கர் சிலைகளையும் , பெரியார் சிலைகளையும் உடைக்க முடியும்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சமூக நீதி என்ற கோட்பாட்பாடு கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது. அது எவராலும் தகர்க்க முடியாத ஒரு மகத்தான கோட்டை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார் .