ADMKவை பதறவிட்ட குட்டி கட்சி… போன் போட்டு பேசிய இபிஎஸ்…! சட்டென்று கிளம்பிய மாஜிக்கள்… ஏமாற்றமே மிஞ்சி அதிர்ச்சி!!

செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக் கட்சி தலைவர் AC சண்முகம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் பேசினார். தலைமை கழக நிர்வாகிகளை…  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலே முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் என்னை  சந்தித்து பேசினார்கள்.

நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலை பற்றி விவாதித்தோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலே  ஒரு பெரிய இயக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்திலே ஒரு கட்டான சூழ்நிலைகளும் உருவாகியிருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

புதியநீதி கட்சியை பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டு நான் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக பாரதிய ஜனதா சின்னத்தில்…  தாமரை சின்னத்தில் நான் போட்டிட்டு இருக்கிறேன். 2014ல் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலே நான் அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா அகில இந்திய நிகழ்ச்சிகளுக்கும் நான் சென்று இருக்கிறேன் என தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தான் பாஜக. பாஜக ஆதரவோடு கூட்டணியில் இருக்கும் குட்டி கட்சி தான் புதிய நீதிகட்சி. அதிமுக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு கோரியும், புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகம் பாஜக பக்கம் தான் நாங்கள் என சொல்லி அதிமுக நிர்வாகிகளை அப்செட் செய்து அனுப்பி உள்ளது, தமிழக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாக அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply