“இரண்டே அடியில்” பெரிய கண்ணாடியை கல்லால் உடைத்த குரங்கு… ஆச்சர்யத்தில் மக்கள்..!!

சீனாவில்  வன உயிர் பூங்காவில் ஒரு குரங்கு கூறிய கல்லால் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  இருக்கும் ஸெங்க்சவ் (Zhengzhou) வன உயிர் பூங்காவில் கடந்த 20-ம் தேதி கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப்  ஒருவர் பார்வையிட்டார். அப்போது ஒரு குரங்கு மட்டும் கல்லை கொண்டு  மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரித்து கொண்டிருந்தது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கண்ணாடி கூண்டு அருகில் நின்று கூரான கல்லால் அந்த கண்ணாடியை தாக்குகிறது.

Image result for Shocking video reveals the moment a monkey smashes its glass cage in

முதல் தடவை தாக்கும் போது உடையவில்லை. இரண்டாவது முறையாக தாக்க, கண்ணாடி உடைந்ததும் கல்லை அங்கே போட்டு விட்டு அங்கிருந்து அஞ்சி ஓடிய அக்குரங்கு ஒளிந்துகொண்டது. இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில்,  உடைந்த கண்ணாடி கூண்டை  நீக்கி விட்டு  வேறு கண்ணாடிக் கூண்டினை மாற்றிவிட்டோம். பிற குரங்குகளை காட்டிலும்  இந்த குட்டிக் குரங்கு சற்று வித்தியாசமாக நடந்து கொள்ளும். வால்நட்களை பிற குரங்குகள் அனைத்தும்  வாயால் கடித்துச் சாப்பிடும். ஆனால்  இந்தக் குரங்கு மட்டும் விசித்திரமாக கல்லைக் கொண்டு கொட்டி சாப்பிடும் என ஆச்சர்யத்தோடு கூறினர்.