‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவிப்பு..!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. 

அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Image result for 'நேர்கொண்ட பார்வை’

 

இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் படம்பிடிக்கப்பட்டு பின்னர் தாடி இல்லாமல் வித்யாபலனுடன் நடித்த காட்சிகளை எடுத்தார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது.இதைதொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து படம்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்  படப்பிடிப்பை முடித்துவிட்டு படக் குழுவினர் சென்னை திரும்பிய நிலையில் விரைவில் இந்த படத்துக்கு அஜித்குமார் டப்பிங் பேசுகிறார் . இப்படம் வரும் ஆகஸ்டு 10-ல் திரைக்குகொண்டுவர படக்குழு முடிவெடுத்துள்ளது.