TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை , புத்தகம், லாக் புக், கால்குலேட்டர் , துண்டு சீட்டு உள்ளிட்டவற்றை தேர்வறைக்குள் கொண்டு செல்லக்கூடாது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கமாட்டார்கள் என்று TNPSC தெரிவித்துள்ளது. அதேபோல வண்ண கலர் கலரான பேனாக்கள் மற்றும் பென்சில்களையும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதும் நேரத்திற்க்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்குள் இருப்பது நல்லது என்றும் TNPSC அறிவுறுத்தியுள்ளது.