ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி விளையாடி அசத்தல்!!

ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று 4 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றியடையச்  செய்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூடோ மற்றும் சாகசச் செயல்களில் அதிக ஆர்வமுடையவர். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் அதிக  ஈடுபாடு கொண்ட புதின், நைட் ஹாக்கி லீக் என்ற அணியில் பங்கேற்று  விளையாடினார்.

Image result for Russian President Vladimir Putin greets his teammates prior to a hockey match at the Bolshoi Arena

அந்த அணியில் புதினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சரான  செர்ஜி சோய்குவும் விளையாடினார். இறுதியில் அதிபர் புதின் சேர்ந்து விளையாடிய  அணி 14 – 7 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தட்டிச் சென்றது. இந்த போட்டியில்  அதிபர் புதின் மட்டும் 4 கோல்கள் அடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *