முதல் வெற்றி யாருக்கு….? ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான்  அணிகள்  மோதுகின்றன

12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது.

இரண்டு  அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் சரிவை சந்தித்து வருகின்றன. வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் இந்த போட்டியில் போராடும் என்பதால் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சொந்த ஊரில் ஆடுவதால்  ராஜஸ்தான் அணி கூடுதல் நம்ம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வெல்லும் முனைப்பில் இரண்டு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.