”அண்ணாத்த” படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணாத்த' டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு | rajini starring annaatthe teaser release date announced - hindutamil.in

சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் தான் பாடியுள்ளார்.மேலும், ”சாரா காற்றே” என்ற பாட்டின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அண்ணாத்த படத்தில் மீனா, குஷ்பூ, மற்றும் கீர்த்தி சுரேஷ் அவர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர்கள் ரஜினியின் சகோதரிகளாக நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *