“8 வயதில் வேலைக்கு சென்ற பணக்கார சிறுவன்!” அதிர்ச்சியூட்டும் காரணம் தெரியுமா..?

கென்டக்கின் லெக்சிங்டனைச் சேர்ந்த நாஷ் ஜான்சன் என்ற சிறுவன் பள்ளியில் படித்து வருகின்றான். அவனுக்கு வாரத்திற்கு பாக்கெட் மணியாக பெற்றோர்கள் 400 ரூபாய் கொடுத்து பழகியுள்ளனர். மேலும் சேமிப்பு மற்றும் செலவு குறித்து கற்றுக் கொடுக்க உண்டியலை பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்துள்ளனர். அந்த சிறுவன் விளையாட X-Box வாங்க வேண்டும் என்ற விருப்பம் வந்ததால் தனது உண்டியலில் இருக்கும் பணம் அதற்கு போதாது என்றும் அதேபோல் வாரம் தோறும் பெற்றோர் தரும் 400 ரூபாய் வைத்து பாக்ஸ் வாங்க நாளாகும் என்பதையும் உணர்ந்துள்ளார்.

அதனால் அதிக பணத்தை பெற என்ன வழி என்று யோசித்த சிறுவன் ஒரு தனக்கு வேலை கிடைத்தால் அதை விரைவாக சேமிக்க முடியும் என்பதை கண்டுபிடித்தான். அந்த சிறுவன் வேலை தேடும் போது வீட்டின் அருகே ஆட்கள் தேவை என்ற நோட்டீசை பார்த்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் கடையின் உரிமையாளர் ஏன் இந்த இந்த வேலை செய்ய விண்ணப்பித்துள்ளாய் என கேட்டதற்கு தனக்கு எக்ஸ் பாக்ஸ் வாங்க காசு வேண்டும்.

எனக்கு பாத்திரம் கழுவும் வேலை நன்றாக தெரியும். அந்த பணிக்கு தான் இங்கே ஆட்கள் தேவைப்படுகின்றது. அதனால் அதை நான் செய்கின்றேன் எனக் கூறியுள்ளான். மேலும் அந்த உரிமையாளர் 16 வயது அடைந்திருந்தால் தான் வேலைக்கு சேர்த்துக் கொள்ள முடியும். எட்டு வயது சிறுவனை சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுவன் விண்ணப்பத்தில் பிறந்த தேதியோ வயது வரம்போ கொடுக்கவில்லை. 18 வயதிற்கு குறைந்தவரா என்று மட்டுமே கேள்வி இருந்தது.

அதன் அடிப்படையில் தான் விண்ணப்பித்தேன். எனக்கு வேலை கொடுங்கள் என்று சிறுவன் கேட்டுள்ளான். ஆனால் சிறுவனின் வயதின் காரணமாக உணவகத்தில் அச்சிறுவனுக்கு வேலை கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அந்த சிறுவனை அழைத்து அவன் முயற்சியின் பரிசாக எக்ஸ் பாக்ஸ் கொடுத்துள்ளனர். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிறுவன் என்னிடம் எக்ஸ்பாக்ஸ் உள்ளது, ஆனால் எனக்கு வேலை கிடைத்திருக்க விரும்புகின்றேன் என தெரிவித்தான். இந்த சிறுவனின் செயல் இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது.

Leave a Reply