8 மணிக்கு தொடங்கிய இரயில் முன்பதிவு…… 5 நிமிடத்தில் காலியானது….!!

பொங்கல் பண்டிகைக்கு இரயில் பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி  5 நிமிடங்களில் கலியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை விடபடுகின்றது. இதில் வார விடுமுறை நாட்களை தவிர ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாட்கள் ஆகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை கொண்டாடலாம்.

இதில் பொங்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் நெல்லை , மதுரை கான டிக்கெட் காலியானது.ஜனவரி 11ஆம் தேதி காண முன்பதிவு நாளையும் , ஜனவரி 12_க்கான முன்பதிவு சனிக்கிழமையும் , ஜனவரி 13_க்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமையும் முன்பதிவு செய்யலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கு முன் பதிவு அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கும். அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கான முன்பதிவு (ஜனவரி 17-ஆம் தேதி)_க்கான முன்பதிவு அடுத்த வாரம் வியாழக்கிழமையும் , ஜனவரி 18-ஆம் தேதிக்க்கான முன் பதிவு அடுத்த வாரம் வெள்ளிக் கிழமையும் , ஜனவரி 19ஆம் தேதி காண முன்பதிவு அடுத்த வாரம் சனிக்கிழமையும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.