வரலாறு காணாத சாதனை படைத்த தளபதி … ஒரே நாளில் YOUTUBE-யில் வெறித்தனம் ..!!

பிகில் படத்தில் தளபதி விஜய் பாடிய “வெறித்தனம் பாடல்” வரலாற்று சாதனை படைத்துள்ளது .

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்உருவான படம் “பிகில்”. மேலும் , விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த   படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Image result for BIGIL VERITHANAM SONG

இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for BIGIL VERITHANAM SONG

இந்நிலையில் இப்படத்தின் `சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடமும் , பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.   தற்போது , படக்குழு விஜய் பாடிய “வெறித்தனம் பாடலை” சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. குறிப்பாக இப்பாடல் ஒரே நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையையும்,

Related image

வெளியான 24 மணிநேரத்தில் உலகளவில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இதுவரை 1.2 கோடி பேர் பார்த்துள்ள இப்பாடல் 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதனால், அதிவேகமாக 10 லட்சம் லைக்குகளை பெற்ற லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை “வெறித்தனம் பாடல்” படைத்துள்ளது.