அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம்: பாஜக விமர்சனம்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. தொடக்கம் முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய சூழலில் அவர் அதிமுக வேட்பாளரை விட 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றார்.

அதிமுகவின் இந்த படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக சாடினார்.

அவர் பேசும் போது, அதிமுக ஒன்றுசேராததே தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும் ? யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்? என அதிமுகவில் தேர்தலுக்கு முன்பே பிரச்சனை எழுந்தது. கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேட்சையாக போட்டிட வேண்டுமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி மீது அண்ணாமலை விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.