ராஜஸ்தான் அணி நிதான ஆட்டம்…. 10 ஓவர் முடிவில் 74/4…!!

ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 74 ரன்களுடன் விளையாடி வருகிறது 

ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.

 

இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் ரஹானே 14 (11) ரன்னில் தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள் யூ முறையில்  ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லரும்  23 (10) ரன்னில் தாகூர் பந்து வீச்சில் ராயுடுவிடம் பிடிபட்டார். அதன் பின் சஞ்சு சாம்சனும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்தனர். சிறிது நேரத்தில்  சாம்சனும்  6 (6) ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த ராகுல் த்ருப்பாதியும் 10 ரன்னில் வெளியேறினார். தற்போது பென் ஸ்டோக்ஸும், ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடி வருகின்றனர்.