சதம் விளாசிய சாம்சன் 102*….. அரைசதம் விளாசிய ரஹானே 70 …. சன்ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்கு….!!

 ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

 

அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 55 பந்துகளில் 102* ரன்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில்  இருந்தார். ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் (3 சிக்ஸர், 4 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 16*(9) ரன்களும், பட்லர் 5 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியில்  ரஷித் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா  1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி 199 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.