மீண்டும் பெங்களூரு அணி தோல்வி……. முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்….!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழந்து  164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக  பார்த்திவ் பட்டேல் 67 (41), ஸ்டோய்னிஸ் 31* (28), ரன்களும் குவித்தனர். விராட் கோலி  23 (25), மொயின் அலி  18* (9), டிவில்லியர்ஸ் 13, ரன்களும் குவித்தனர்.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Seithi Solai

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின்  தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், கேப்டன் அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் ரஹானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும், ஜாஸ் பட்லரும் இணைந்து நேர்த்தியாக ரன்களை குவித்தனர். அதன் பின் அரைசதம் கடந்த ஜாஸ் பட்லர் 59 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த  ராகுல் த்ரிப்பாதியும் , ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். கடைசி கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 38 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க இறுதியில் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் த்ரிப்பாதி 34* (23)  ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 1* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.