”2,00,000 பேர் காலி” மராட்டியத்தை தீர்த்து கட்டிய மழை….!!

மராட்டியம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மராட்டியத்தில் கோலாப்பூர் , சார்தரா , சங்கிரி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் பேர் காலி செய்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல் படை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூலம் பொது மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் .

Image result for Heavy rains in states including Maratham, Gujarat

இதே போல குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள  கேடா மாவட்டத்தில் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உறவினர்கள் கண்முன் இருவரின் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.