அசுர பந்து வீச்சில் அடங்கிய டெல்லி….. பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி..!!

டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. 

12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 (29)ரன்களும் குவித்து  ஆட்டமிழந்தனர். இறுதியில்  மந்தீப் சிங் 29*(21), ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா, லமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2         ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ரிசப் பன்ட்39 (26) ரன்களும், கோலின் இங்ரம் 38 (29) ரன்களும், ஷிகர் தவான் 30 (25) ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 28 (22) ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும், கேப்டன் அஷ்வின், முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில்ஜோயென் 1 விக்கெட்டுகளும்  வீழ்த்தினர். இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில்  பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.