ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு.. வாடிக்கையாளர்கள் கவலை!

தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 384 உயர்ந்து ரூ 30, 944 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ 3, 868 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ 39 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.