“6 நாட்களாக சரிந்த பெட்ரோல் டீசல் விலை” மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தொடர்ந்து 6_ஆவது நாளாக குறைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி இருந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் 

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி  73 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி  69 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 6 வது நாளாக குறைந்து கொண்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நிலையாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *