திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்…..!!

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் மதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மற்ற கட்சி வேட்பாளர் யார் யார் என்பது தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது .

திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் :

வடசென்னை – கலாநிதி வீராசாமி  , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு , காஞ்சிபுரம் – செல்வம் ,  அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் , வேலூர் –  கதிர் ஆனந்த் ,  தர்மபுரி – மணி அல்லது  செந்தில்குமார் திருவண்ணாமலை – அண்ணாதுரை , கள்ளக்குறிச்சி – கவுதம் சிகாமணி ,  சேலம் – வீரபாண்டி பிரபு  , நீலகிரி – ஆ ராசா  , பொள்ளாச்சி – கிருபா சங்கர் , திண்டுக்கல் – வேலுச்சாமி , கடலூர் –  கதிரவன் அல்லது புகழேந்தி , மயிலாடுதுறை – ராமலிங்கம் , தஞ்சை – பழனிமாணிக்கம் , தூத்துக்குடி – கனிமொழி  , தென்காசி – தனுஷ் குமார்  , நெல்லை – ஞானதிரவியம்

Image result for திமுக கூட்டணி

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் :

திருவள்ளுவர் – செல்வப்பெருந்தகை , கிருஷ்ணகிரி – டாக்டர் செல்வகுமார் ,

ஆரணி – விஷ்ணு பிரசாத் , கரூர் – ஜோதிமணி , திருச்சி – திருநாவுக்கரசர் , சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் அல்லது சுதர்சன நாச்சியப்பன் , தேனி –  ஜெயம் , விருதுநகர் – அருண் அல்லது மாணிக் தாகூர் , குமரி – ரூபி மனோகர் அல்லது வசந்தகுமார் , புதுச்சேரி – ஏபி சுப்பிரமணியன்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதி வேட்பாளர்கள்  ;

திமுக கூட்டணி கட்சியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் சு வெங்கடேசன் , கோவையில் நடராஜனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதி வேட்பாளர்கள்  ;
இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் வகையில் செல்வராஜும் திருப்பூரிலும் மற்றும் சுப்புராயன் நாகையிலும் போட்டியிட உள்ளனர் .
 Image result for திமுக கூட்டணி
மதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் 1 தொகுதி வேட்பாளர்  :

 திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள ஈரோட்டில் முன்னாள் எம்பியும் மதிமுக கட்சியின் பொருளாளருமான கணேசமூர்த்தி போட்டியிடுகிறார் .
விசிக கட்சி சார்பில் போட்டியிடும்2 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் :
விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சிதம்பரத்தில் அதன் தலைவர் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது .

Image result for திமுக கூட்டணி

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் 1 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் :

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அதன் நிறுவனர் பச்சமுத்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது ..

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் 1 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் :

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி காணாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாமக்கல்லில் ஈஸ்வரன் போட்டியிடுகிறார் .