தனுஷின் படத்தை தயாரிக்க ஒரு காலகட்டத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் தனுஷ் சினேகா நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தனுஷின் மாறன் திரைப்படத்தை இந்நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படமும் தனுஷின் கேரியரில் மிக மோசமான தோல்வியை தழுவியது.
ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் உடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஏற்கனவே போட்டதால் கேப்டன் மில்லர் திரைப்படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷை வைத்து படம் எடுத்தது போதும் என்று கருதி கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.