பிகில் படத்தால் கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்?… உண்மை என்ன..? லவ் டுடே தயாரிப்பாளர் ஓபன் டாக்..!!!

அர்ச்சனா கல்பாத்தி தமிழ் சினிமா உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவரின் தயாரிப்பில் சென்ற வருடம் வெளியான லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் பெரும் தோல்விக்கு பிறகு வெற்றி கிடைத்திருக்கின்றது என தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு முன்பாக அவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

பிகில் திரைப்படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும் லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பெரும் தோல்விக்கு பின் இப்படி ஒரு வெற்றி என அர்ச்சனா கல்பாத்தி பேசி இருப்பது பிகில் திரைப்படத்தை குறிப்பிட்டு தான் பேசி இருக்கின்றாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

Leave a Reply