தொடரும் தண்ணீர் பஞ்சம்…. ஜூன் 22_ஆம் தேதி முதல் போராட்டம் ….ஸ்டாலின் அறிவிப்பு …!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் தண்ணீர் பஞ்சம் க்கான பட முடிவு

மேலும் அவர் கூறிய அறிக்கையில் , உள்ளாட்சி துறை அமைச்சரின் அக்கறையள்ள தன்மையால் குடிநீரின்றி மக்கள் அவதி படுகின்றனர்.எதிர்க்கட்சிகள் வீண் வதந்தி பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் இல்லை என பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குடிநீர் பிரச்சனையை போக்க , முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஜூன் 22 முதல் மாவட்டம் வாரியாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முக ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.