தமிழக அரசு பாலின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டசபை கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு தமிழக முதல்வரும் விரைவில் பால் உற்பத்தி விலை உயர்த்தப்படுமென்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் , எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கும் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பசும் பால் ஒரு லிட்டருக்கு ரூ 28_இல் இருந்து 32 ரூபாய் ஆகவும் , எருமை பால் ரூ 35 _இல் இருந்து 41 ரூபாய் ஆகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.2011-ஆம் ஆண்டுக்கு பின்பு தற்போது தான் பாலின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக பால் உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு விலையையும் உயர்த்தியுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை 19_ஆம் தேதி முதல் அமுலாகின்றது.