தங்கத்தின் விலை குறைவு….. நிம்மதியடைந்த பொதுமக்கள்…..!!

இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 160 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த 4ஆம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாயும் , சவரனுக்கு 120 ரூபாய்யும்  குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 3, 634 ரூபாய்க்கு , ஒரு சவரன் 29,072 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம் வெள்ளி விலை கிராமிற்கு 30 காசும் , கிலோவிற்கு 300 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில்ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 20 காசுக்கும் கிலோ 51,200 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது. ரூ 30,000_த்தை தாண்டிய தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.ஆனாலும் இன்னும் தங்கத்தின் விலை குறையவேண்டுமென்பதே பொதுமக்களின் எண்ணமாக இருக்கின்றது.