ஆடிப்பெருக்கை முன்னிட்டு இரட்டிப்பான பூவின் விலை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த  ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் பயிரிடப்பட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது.

Image result for கெந்தி பூ

இந்நிலையில் ஆடிவெள்ளி ஆடிப்பெருக்கு பண்டிகை காரணமாக பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் தற்பொழுது 600 ரூபாய் மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல அரளிப்பூ 400 ரூபாய்க்கும் சம்மங்கி 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பூக்களின் விலை இரட்டிப்பாக்கி உள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.