தொடர்ந்து 3 நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல்……!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Seithi Solai

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி  75 ரூபாய் 62 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய  விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்து  69 ரூபாய் 83 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.