பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தவறானது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் , இந்த அரசாணையை திரும்பப் பெற்று பெயரில்லாமல் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர் . மேலும் பொள்ளாச்சி பாலியல் வீடியோக்களை இணையத்தில் இருந்து தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டதோடு சமூக ஊடகங்கள் நன்மை தீமைகள் குறித்து பள்ளி கல்லூரிகளில் பாடங்களில் கொண்டு வரலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர் .