அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆஷிஷ் உயிரிழந்து விட்டார். மேலும் பைக்கின் பின் இருக்கையில் இருந்த மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து நேற்று காசியாபாத் போலீஸ் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையின் போது 18 வயது நிறைவடையாத 22 சிறுவர்கள் பைக் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்த போலீசார் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நடவடிக்கை தொடரும் என போலீசார்  தெரிவித்துள்ளனர்.