வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….2 பேர் கைது….நகை, பணம் பறிமுதல்…!!

பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். 

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும்  திருடி சென்றுள்ளனர்.

Related image

இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இது குறித்து சரவணன் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த ராகுல்ட்ராவிட் மற்றும் அகத்தியன் ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

Image result for திருட்டு

இந்த விசாரணையில் இவர்கள்தான் நகை, பணத்தை திருடியுள்ளனர்  என்று தெரியவந்தது. இவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்து சரவணனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.