ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். இதனால் மகனுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் கோபமடைந்த சேகர் அருகிலுள்ள கம்பை எடுத்து மகனை அடிக்க சென்றார்.

Image result for கம்பியால் தாக்கு
அப்போது அவரது மகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தந்தையின் தலையில் பலமாக அடித்தார். மகன் அடித்ததில் சேகர் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிக்சைக்காக சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தையை கொலைசெய்த மகனை  பூந்தமல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.