30க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை…… சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்…!!

மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள  மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Image result for சிக்கிய திருடன்

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் சி.சி.டி.வி கேமராவில்  பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஜெயக்குமாரி வீட்டில் திருடிய நபரை கைது செய்தனர்.இதனையடுத்து  விசாரணை நடத்தியதில்  அந்த நபர் முடக்கத்தான் பகுதியை சேர்ந்த அம்பேத்கர் முத்து என்பதும், இவர் திறந்திருக்கும் இருக்கும் வீட்டை நோட்டமிட்டு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர்