பேரன், மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது…!!

வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது  செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த சிவகுமார் சிறுவன் ஆகாஷை விரட்டிச் சென்று  சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மூதாட்டியான மலர்கொடியையும் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த வல்லம் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சேர்ந்து சிவகுமாரை கைது செய்தனர்.