மனைவிக்காக… “6 மணிநேரம் நின்ற கணவன்”… வைரலாகும் புகைப்படம்…!!

மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று கொண்டு வருகிறார். இதுதான் உண்மையான அன்பு என்று குறிப்பிட்டிருந்தார்.
Image
ஆனால் அந்த தம்பதியினரின் பெயர் தெரியவில்லை. அந்த விமானம் எங்கிருந்து எங்கு செல்கிறது என்ற விவரமும் தெரியவில்லை. இந்த புகைப்பட பதிவிற்கு மனைவி மீது கணவன் வைத்திருந்த அளவுகடந்த அன்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் சுமார் 16 ஆயிரம் லைக்குகளையும் சுமார் 3500 ரீ ட்விட்டுகளையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஒரு பக்கம் கணவரின்  அன்பை பாராட்டி டுவிட் செய்தாலும் மறுபுறம் அவரது மனைவி சுயநலம் கொண்டவள்  என்றும் திட்டித் தீர்க்க தொடங்கினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.