பாசமாக நாயை வேட்டைக்கு அழைத்து சென்ற நபர்! பட்டென்று துப்பாக்கியால் போட்டு தள்ளிய நாய்..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா இளைஞர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித். பிளம்பரான இவர் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டிருக்கின்றார். அதன்படி தனது வளர்ப்பு நாயுடன் வேட்டைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது தனது காரின் முன்னறிக்கையில் அமர்ந்த ஜோசப் காரை ஓட்டி செல்ல பின் இருக்கையில் நாய் இருந்துள்ளது. அதே இருக்கையில் வேட்டைக்கான துப்பாக்கியும் இருந்ததால் அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறி குதித்துள்ளது. அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது. இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் துப்பாக்கி மீது நாய் எகிறி குதித்ததால் குண்டு வெளியேறி அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.