”’சட்டமன்ற இடைத்தேர்தல்”…… வேட்பாளர்களை அறிவித்த மக்கள் நீதி மையம்…!!!

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் நீதி மையம் கட்சி தற்போது அறிவித்துள்ளது.  

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Image result for மக்கள் நீதி மையம் கட்சி

மேலும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிக்காத  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகியவற்றோடு சேர்த்து 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு அனைத்தும் முடித்துவைக்கப்பட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அறிவித்தது. அதில் மே 19_ஆம் தேதி இந்த 4 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறு _ மென்றும் (22/04/19) நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது.

Related image

இதைத்தொடர்ந்து இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தற்போது 4  தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில்

திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேலும்,

சூலூர் தொகுதியில் ஜி.மயில்சாமியும்,

அரவக்குறிச்சி தொகுதியில் எஸ்.மோகன்ராஜும்,

ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.காந்தியும், போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.