வயதான தம்பதியினருக்கு ஆயுள் தண்டணை….. காரணம் என்ன….!!!

கலிபோர்னியாவில் பெற்ற குழந்தைகளை கொடுமை படுத்திய தம்பதியினருக்கு கோர்ட் ஆயுள் தணடனை வழங்கியுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57) இவருடைய மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு  3 முதல் 30 வயதிலுள்ள 12 குழந்தைகள் உள்ளனர்.  இந்த குழந்தைகள் பிறந்ததிலிருந்து வீட்டுக்குள் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து டேவிட் ஆலன் டர்பினும் அவரது மனைவியும் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

Related image

இந்நிலையில் ஒரு பெண்குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்து போலீசில் புகார் செய்திருக்கிறாள். இவள் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் டேவிட் ஆலன் வீட்டிற்கு சென்று கட்டி வைக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி அக்குழந்தைகளின் பெற்றோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட் இந்த அரக்கத்தனமான தம்பதியினருக்கு ஆயுள் தண்டனையை வழங்கி,  மேலும் இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பின்னரே பரோல் வழங்கவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.