பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செல்வேந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்ட தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் கூடுதல் பொறுப்பூதியும் வழங்கப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தினை மீண்டும் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.